Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 05 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைக்கு அடிமையாகியுள்ள நபர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் புனர்வாழ்வு பெற்றுக்கொள்வதற்காக, பொது மன்னிப்புக் காலத்தை அமுல்படுத்தவுள்ளதாக போதை நிவாரண செயலணி தெரிவித்துள்ளது.
இந்தக் காலத்தில் பொதுமன்னிப்பு பெறாத போதைக்கு அடிமையானவர்களை அதன் பின்னர் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆண்டுளவில் போதையற்ற நாடாக இலங்கையை உருவாக்கும் ஜனாதிபதியின் சிந்தனையின்கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைக்கு அடிமையான 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு இவ்வருடத்துக்குள் புனர்வாழ்வளிக்க தயாராக உள்ளதாக அந்த செயலணி தெரிவித்துள்ளது.
மேலும், 50 ஆயிரம் பேர் போதைக்கு அடிமையாகியுள்ளதாக பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளதுடன் இவர்களை 2020 ஆண்டுக்குள் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago