Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 10 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவதற்கு, கட்சித் தலைவர் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் முறைமையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால், அவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, முடிவுகளை எட்டுவதற்கும் இந்தக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள தொகுதி எல்லை நிர்ணயத்தின் ஊடாக சிறுபான்மைக் கட்சிகளுக்கு அசாதாரணம்
இழைக்கப்பட்டுள்ளதாகவும் இது சிறுபான்மையினத்தினருக்கு அசாதாரணத்தை இழைக்கும் செயலென்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, புதிய முறைமையில் குளறுபடிகள் காணப்படுவதாகவும் பழைய முறையிலேயே தேர்தலை நடத்தினால் உசித்தமானது என்று ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்தவேண்டாம் என்றும் புதிய முறையில் தேர்தலை நடத்துமாறும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஸ் குணவர்தனவும் சுதந்திரக் கட்சியின் சார்பில் பங்கேற்றிருந்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர் என்று அறியமுடிகின்றது.
இதனையடுத்து, அக்கூட்டத்தில் கருத்துமுரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்றும், எனினும், இரண்டு பிரதானக் கட்சிகளும் புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது என்றும், ஏனையக் கட்சிகளும் அத்தீர்மானத்துக்கு இணங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை, இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காக இந்தக் எல்லை நிர்ணயக்குழுவானது எதிர்வரும் 23ஆம் திகதியன்று மீண்டும் கூடவுள்ளது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago