2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பெரியாம்பி சிக்கினார்: சின்னாம்பி தப்பினார்

Kanagaraj   / 2015 நவம்பர் 24 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியிலுள்ள அலைபேசித் திருத்தகக் கடையொன்றை அடித்து உடைத்த குற்றச்சாட்டில் பெரியாம்பி என்றழைக்கப்படும் நபரும், கடையில் பணியாற்றும் இளைஞனை அடித்துக் காயப்படுத்தியமை தொடர்பில் மேலும் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கடைக்கு மதுபோதையில் கடந்த 21 ஆம் திகதி சென்ற பெரியாம்பி எனப்படும் சந்தேகநபர், ஊடரங்குச் சட்டம் போடப்பட்டுள்ள நிலையில், கடையைத் திறந்து வைத்துள்ளாயோ எனக்கூறி கடையை அடித்துடைத்துள்ளார். இதனால், 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நட்டமடைந்ததையடுத்து, கடை உரிமையாளர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார். அதன் பிரகாரம் பெரியாம்பி, திங்கட்கிழமை (23) கைது செய்யப்பட்டார்.

தனது தமையனைக் கைது செய்வதற்குக் கடைக்காரர் தான் காரணம் எனக்கூறி தன்னுடன் மேலும் இருவரைச் சேர்த்துக் கொண்டு, கடைக்குச் சென்ற பெரியாம்பி என்பவரின் சகோதரரனான சின்னாம்பி, கடையில் பணியாற்றிய இளைஞனை கடுமையாகத் தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை, திங்கட்கிழமை (23) கைது செய்தனர். ஆனால், தாக்குதல் மெற்கொண்ட பிரதான சந்தேகநபரான சின்னாம்பி தலைமறைவாகிவிட்டார்.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .