George / 2016 டிசெம்பர் 29 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த இலங்கை பிரஜைகள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆவண சோதனையின் போது, போல கடவுச்சீட்டு வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், தாங்கள் இருவரும் இந்திய பிரஜைகள் என்று வாதாடிய போதும், போலி கடவுச்சீட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் 10 வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
49 minute ago
57 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
57 minute ago
2 hours ago
6 hours ago