2024 மே 03, வெள்ளிக்கிழமை

’மோடியிடம் செல்ல முன் சொல்லி இருக்கலாம்’

Freelancer   / 2022 ஜனவரி 20 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும் அது இறைமையுள்ள நாடு என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, நேற்று (19) நினைவூட்டினார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்தத் தவறியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,
 
நாம் இறையாண்மையுள்ள நாடு, இந்தியாவின் ஒரு பகுதி அல்ல எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது கவலைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக எங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

"எங்கள் தமிழ் சகோதரர்கள்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விழித்த அவர், இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் தங்கள் கவலைகளை கலந்துரையாடியிருக்க வேண்டும் என்று ஷ மீண்டும் வலியுறுத்தினார்.

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதியும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை நேற்று முன்தினம் (18) சந்தித்து குறித்த ஆவணத்தைக் கையளிதிருந்தது.

குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரும் அடங்குகின்றனர்.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடைவதற்காக 13ஆவது திருத்தத்தை கட்டியெழுப்புவதற்கு கடந்த காலங்களில் இந்திய மற்றும் இலங்கைத் தலைவர்கள் செய்த பல பொது உறுதிமொழிகளை அந்த ஆவணம் நினைவு கூர்ந்துள்ளது.

தமிழ் பேசும் மக்கள், பிளவுபடாத நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, அவர்களின் இயற்கை வாழ்விடங்களில் கண்ணியமாகவும், சுயமரியாதையுடனும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆவணத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பிரச்சினையில் காலத்துக்குக் காலம் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன், அவற்றை அமுல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .