Editorial / 2019 ஒக்டோபர் 16 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்குளி பகுதியில் உள்ள தேவாலயம் மற்றும் அதற்கு அருகில் அமைந்துள்ள பாடசாலைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் , சந்தேகத்துக்குரிய வாகனம் அல்லவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இயந்திக் கோளாறு காரணமாக குறித்த வாகனம், உரிமையாளரால் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த வாகனத்தின் உரிமையாளர் தற்போது சம்பவ இடத்துக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக, நேற்று (15) இரவு குறித்த வாகனம் இயந்திக் கோளாறுக்கு உள்ளாகியதுடன், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று (16) காலை பாடசாலைக்கு சென்ற பெற்றோர் மற்றும் மாணவர்கள் அதனை கண்டு அச்சமடைந்து கலவரப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த வாகனத்தின் உரிமையாளர் அங்கு வந்துள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் போலியான தகவல் பரவியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026