Editorial / 2026 பெப்ரவரி 06 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலம்பிட்டி பிரதான வீதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று வெள்ளிக்கிழமை (6) காலை முதல் உயிருக்கு போராடி வருகிறது.
சுமார் 10 வயது மதிக்கத்தக்க தாக கூறப் படுகின்ற குறித்த யானை எழும்பி நடக்க முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு யானை கூட்டம் ஒன்று வியாழக்கிழமை(5) இரவு வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் பொலிஸ் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த யானையை அப் பகுதியூடாக செல்லும் மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .