2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மீண்டும் தொடங்கிய யாழ் சர்வதேச மைதான கட்டுமான பணி

Freelancer   / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் நிலவிய டிட்வா சூறாவளி காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
 
இதன் காரணமாக 2026 ஜனவரி 14 ஆம் திகதி நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்தப் போட்டி உட்பட திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களில் தடங்கல் ஏற்பட்டது.
 
தற்போது பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பின்னர் இந்த பரீட்சார்த்தப் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் மைதானத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய முடியும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X