Editorial / 2026 ஜனவரி 27 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை மாணவ தலைவருக்கும், பாடசாலையில் கற்பிக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் உறவின் வீடியோ காட்சிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் நலகா கலுவேவா அப் பாடசாலையின் அதிபருக்கு பணித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ காட்சிகள் குறித்து கல்வி அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது என்றும் செயலாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பாக அதிபர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நலகா கலுவேவா கூறினார்.
அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை பெண் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்வதோ அல்லது வேறு எந்த ஒழுங்கு நடவடிக்கையோ எடுக்க முடியாது என்றும் செயலாளர் கூறினார்.
கொழும்பில் உள்ள அந்தக் கல்லூரியின் தலைமை மாணவர் என்று கூறிக்கொள்ளும் மாணவன், அவ்வப்போது அந்தக் கல்லூரியில் மூன்று பெண் ஆசிரியர்கள் மற்றும் மற்றொரு மாணவரின் தாயுடன் வீடியோ அழைப்புகளைச் செய்வதும், அவர்கள் நிர்வாணமாக பல்வேறு செயல்களில் ஈடுபடுவதும் போன்ற காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
50 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago