Editorial / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

லெட்சுமிக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தினமும் மது குடிக்க பணம் இல்லை. இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு திருமணத் தரகு நிறுவனத்துடன் தொடர்புடைய ரமாதேவி மற்றும் மஞ்சுளா ஆகியோர் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு கேட்டனர்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத், எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்தவர் பி.ஸ்ரீனிவாஸ், இவரது மனைவி லெட்சுமி. தம்பதிக்கு 2 மாத ஆண் குழந்தை உள்ளது.
பணம் வந்தால் மது குடிக்கலாம் என்ற ஆசையில் லெட்சுமி தனது கணவருக்கு தெரியாமல் குழந்தையுடன் தலைமறைவானார்.
2 பெண்கள் உதவியுடன் புனேவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான விஷால் என்பவருக்கு ரூ. 2.4 லட்சத்திற்கு குழந்தையை விற்றனர்.
லெட்சுமியின் கணவர் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தினர். லட்சுமி, மஞ்சுளா, ரமாதேவி மற்றும் விஷால் ஆகியோர் கைது செய்து குழந்தையை மீட்டனர்.
மதுவுக்காக குழந்தையை விற்பனை செய்யும் அளவிற்கு காலம் கலிகாலம் ஆகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
28 minute ago
42 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
42 minute ago
57 minute ago
1 hours ago