Freelancer / 2026 பெப்ரவரி 14 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, மதுவரித் திணைக்களத்தின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்திறனாகவும் முன்னெடுப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவுசெய்ய உத்தேசிக்கப்பட்ட மதுவரி வருமான முகாமைத்துவக் கட்டமைப்பின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் அரச நிறுவன நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு உயர் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் இங்கு தெரிவித்தார். மதுவரித் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் இதற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர்.
மேலும், மதுவரித் திணைக்களம் கடந்த 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட நிதி செயற்பாடுகளுக்காக பிரதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பாராட்டியமையுடன், இந்த ஆண்டு மேலும் உயர் நிதி முன்னேற்றத்தை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்தனர்.
தற்போதைய சமூக மற்றும் தொழில்நுட்ப போக்குகளுக்கு ஏற்ப மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்தும் பணிகளை விரைவுபடுத்தவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திருத்தங்களை நிறைவு செய்து சட்டவரைஞருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
மதுவரித் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிக்க புதிய சேவை யாப்பின் அவசியத்தை குழு வலியுறுத்தியதுடன் இதற்கு மேலதிகமாக அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. (a)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .