Editorial / 2026 மார்ச் 18 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

மதுபான விருந்தின் போது ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியதில், பலத்த காயமடைந்த நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை உயிரிழந்துள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம், சூரியவெவ, அந்தரவெவ உஸ்கல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சூரியவெவ, அந்தரவெவ உஸ்கல முகவரியைச் சேர்ந்த 42 வயதுடைய எதிரிமான்னகே ரவீந்திர குமார என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் கடந்த 16ஆம் திகதி இரவு தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனது சகோதரியின் கணவருடன் இணைந்து மதுபான விருந்தில் கலந்துகொண்டுள்ளார். இதன்போது, இருவருக்கும் இடையே நிலவிய பழைய கோபம் மீண்டும் மேலெழுந்ததால் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலைத் தடுத்து நிறுத்த சந்தேகநபரின் மனைவி (உயிரிழந்தவரின் சகோதரி) முயன்றபோது, சந்தேகநபர் அவரையும் தாக்கியுள்ளார். இதில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சந்தேகநபர் தனது மைத்துனரை கடுமையாகத் தாக்கியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலை வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
14 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago