Editorial / 2026 மே 01 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நான்கு இளம் பெண்களை அங்குருவாதொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹொரண மற்றும் கோனப்பொல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26, 27, 28 மற்றும் 29 வயதுடைய பெண்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த நான்கு பெண்களும் ஹொரண, ரெமுண, பெல்லபிட்டிய பகுதியில் உள்ள 'ஆதாதொல' ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு மது அருந்திவிட்டு, மீண்டும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே வீதிப் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஒரே பாதையில் பயணித்துக்கொண்டிருந்த இந்த நான்கு பெண்களையும் பொலிஸார் நிறுத்தி சோதனை செய்தபோது, அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஒரே இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நீண்டகாலமாகவே இவ்வாறு ஆற்றுக்குக் குளிக்க வரும்போது மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், இவர்கள் மதுப்பழக்கத்திற்குப் பலத்த அடிமையாகியுள்ளமையும் விசாரணைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
13 minute ago
35 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
36 minute ago
47 minute ago