Editorial / 2026 மார்ச் 05 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்துகம, கந்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது புதன்கிழமை (04) இரவு இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மத்துகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலின் போது வீட்டின் முன்பக்க ஜன்னல், சுவர்கள் மற்றும் உட்புறத்திலிருந்த உடமைகள் ஆகியன சேதமடைந்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், வீட்டிலிருந்தவர்களுக்கு காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சும்பவத்தின் போது கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் காணப்பட்டுள்ளனர் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
9 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
37 minute ago