Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பியூமி பொன்சேகா
அரசாங்கத்துக்கு 10 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்ட மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறிப் பத்திர கொடுக்கல் வாங்கலில் குற்றவாளியாக இனங்காணப்படுபவர்கள், அந்த நட்டத்தை திறைசேரிக்கு மீண்டும் செலுத்த வேண்டும் என்று, ஜாதிக ஹெல உறுமய, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தது.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது, அங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்ததாவது,
“மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறிப் பத்திரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையிலிருந்தான தனது கண்காணிப்பை, கணக்காய்வாளர் தலைமை அதிபதி வாபஸ் பெறுவதற்கு, நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்கங்களைச் செலுத்தியமையானது, ஏமாற்றத்தை தருவதோடு இழிவான செயலாகவும் உள்ளது” என்று, அவர் தெரிவித்தார்.
“இந்தச் சர்ச்சையில் யார் குற்றவாளி என்று தெளிவாகத் தெரிகின்றது” என்று தெரிவித்துள்ள அவர், “அதனால் அதனை நிரூபிப்பதற்கான அறிக்கைகள் அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனை, வெகுவிரைவில் வழங்கப்படல் வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago