2025 மே 21, புதன்கிழமை

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி மரணம்

Freelancer   / 2025 மே 21 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - வெலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் நேற்று மாலை 11 வயதுடைய சிறுமி  மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

உயிரிழந்த சிறுமி கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர் நேற்று வீட்டின் ஸ்லப்பில் ஏணியைப் பயன்படுத்தி ஏறிய நிலையில், அங்கு குரங்குகள் வருவதால் கம்பியில் மின்சார இணைக்கப்பட்டிருந்தது. 

இதன்போது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வேலம்பொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .