2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக ஆஜராக அழைப்பு

Nirosh   / 2023 ஜனவரி 24 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது அமல்ப்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டால் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனவே, இம்மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரையில் மின்வெட்டை அமல்ப்படுத்தாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து மின்சக்தி, வலுசக்தி சக்தி அமைச்சின் செயலாளர், பொதுப்பயன்பாட்டு அலுவல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், இது தொடர்பில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினரும் எந்தவொரு நடவடிக்கைகளையும் இதுவரையில் எடுக்கவில்லை எனவும், இதனால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்காக  நாளை (25) ஆணைக்குழு முன்பாக ஆஜராக வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .