2025 ஒக்டோபர் 07, செவ்வாய்க்கிழமை

மன்னாரிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.ஆர்.லெம்பேட்

யாழ்ப்பாணத்தில்   சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  வடமாகாண  சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (07) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.  குறித்த பணிப் புறக்கணிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் சட்டத்தரணிகளும்  பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

மாவட்ட நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதிமன்றத்திற்கு  செவ்வாய்க்கிழமை (7) சட்டத்தரணிகள் சமூகமளிக்காதுபணிப் பகிஷ்கரிப்பைமேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில்   சட்டத்தரணிக்குஎதிராக முன்னெடுக்கப்பட்டசம்பவம் எதிர் காலத்தில் இடம் பெறக் கூடாது என்பதை வலியுறுத்தி குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை சட்டத்தரணிகள் முன்னெடுத்துள்ளனர்.

இதனால்  மன்னாரில் நீதிமன்ற செயல்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு,இன்றைய (07) நாளுக்கான வழக்கு விசாரணைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X