2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

மன்னாரில் உணவகத்துக்கு எதிராக சுகாதார துறை நடவடிக்கை

Editorial   / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னார் நகர் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய செவ்வாய்க்கிழமை (09) அன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு சுகாதார குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை   மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவில் இயங்கி வரும் குறித்த உணவகம் முன்னதாக பல சுகாதார குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை இடம் பெற்ற போதிலும் மீண்டும் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபை சுகாதார பரிசோதகர்,மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த உணவகம் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 
சுகாதாரமற்ற முறையில் உணவு தாயாரித்தமை,களஞ்சியப்படுத்தியமை,உணவகத்தின்,சுத்தம் பேணப்படாமை,உணவு தாயாரிக்கும் ஊழியர்கள்,கையுறை,தலையுறை பயண்படுத்தாமை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டது

இந்த நிலையில் குறித்த உணவகத்துக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் சுகாதார அதிகாரிகளால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X