2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

முன்னாள் அமைச்சர் டயானாவுக்கு பிடியாணை

Editorial   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தை மீறி, தவறான தகவல்களைச் சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற்று, செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு பிரதான  நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க வியாழக்கிழமை (21) பிடிவிறாந்து பிறப்பித்தார். டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும்   நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தை மீறி விசா இல்லாமல் நாட்டில் தங்கியதாக டயானா கமகே மீது சிஐடி தாக்கல் செய்த ஏழு வழக்குகளின் சாட்சிய விசாரணை இன்று (21) நடைபெறவிருந்தது, மேலும் வழக்கு அழைக்கப்பட்டபோது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த பிடிவிறாந்து  பிறப்பிக்கப்பட்டது.

 

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், மேல் நீதிமன்ற வழக்கு கோப்புகளின் பாதுகாவலர் மற்றும் வழக்கின் முதல் சாட்சியான வாதி ஆகியோரின் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜரானர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X