2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

முன்னாள் எம்.பி. கனகசபை காலமானார்

Freelancer   / 2025 செப்டெம்பர் 20 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று (19) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் 

1939.03.20 அன்று பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான இவர் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்தேசியத்தின் தீவிர பற்றாளராய் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் பயணித்த அன்னாரது இழப்பு பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X