2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘மனிதாபிமான முறையில் அணுக வேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல் 

இழப்பீடு வழங்கும் செயற்பாடுகளை, புலிகளுக்கானது என்று மாத்திரம் கருதுவதில் அரத்தமில்லையெனத் தெரிவிக்கும் ஜே.வி.பி யின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி, “மேற்படிச் செயற்பாடுகளை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும்” என்றார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்குபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“நாட்டில் இடம்பெற்ற மோதல் நிலைமைகளின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அது இந்நாட்டில் சிவில் யுத்தம் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் நாட்டிலுள்ள சொத்துகளுக்கும், பிரஜைகளுக்கு ஏற்பட்ட இழப்பீடுகளுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கான சட்டமூலமாகும்” என்றார்.  

“இதனைச் சிலர் பல விதங்களில் அர்த்தப்படுத்துகின்றனர், புலிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டமூலம் எனக் கூறுகின்றனர். இந்தச் சட்டமூலம் மோதல் நிலைமைகளின் போது எவருக்கேனும் இழப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அதற்கான இழப்பீடு வழங்குவதற்கான சட்டமூலமாகு​ம் என்பதே எமது நிலைப்பாடு” எனத் தெரிவித்த அவர், இழப்பீடுகள் வழங்கப்படும்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவினத்தவரும் அடங்குவர் என்பதை கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும். “இது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, புலிகளுக்கானது என அர்த்தப்படுத்துவதில் நியாயமில்லை” என்றும் தெரிவித்தார்.  

“அதேபோல, 2019ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ​ஜே.வி.பி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் இழப்பீடு வழங்கவேண்டும் என்று யோசனை ஒன்றை முன்வைத்திருந்தது. எனவே, இந்த விடயத்தை மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும்” என்றும் தெரிவித்தார்.  

“குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட சிலர். இந்த விடயங்கள் மூலம் இனவாதத்தைப் பலப்படுத்தி, அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்ள முற்படுகின்றனர்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .