Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்றிக்கு வைத்த மின் வேலியில் தானே சிக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அம்பனை, துர்க்காபுரம், தெல்லிப்பளையைப் சேர்ந்த குணரட்ணம் சிவகுமார் (வயது 64) என்பவராவார்.
மேற்படி நபர் கிளானை என்னும் இடத்தில் இரண்டு மரவெள்ளி தோட்டத்தை செய்து வந்ததாகவும் இதில் ஒரு தோட்டத்திற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு பன்றிக்கு மின்வேலி வைத்துவிட்டு, மறதி காரணமாக மின்னை துண்டிக்காமல் சென்றுள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை தோட்டத்திற்கு மீண்டும் சென்ற போது மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை தெல்லிப்பளை பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
3 hours ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago