2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

ஹரக் கட்டாவை கொலை செய்ய ’கெமரா துப்பாக்கி’

Freelancer   / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹரக் கட்டாவை குறிவைத்து முன்னெடுக்கப்பட இருந்த கொலை திட்டத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலையை செய்ய கெமராவுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் துப்பாக்கியை வைத்து கவனமாக தயாரித்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கம்பஹாவில் உள்ள உடுகம்பொல, தொம்பவலவைச் சேர்ந்த 47 வயதான வெல்டர், அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

கெமராவுக்குள் 3.8 மிமீ துப்பாக்கியை திறமையாக பொருத்தியதற்கு அவர் பொறுப்பேற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட ஒருசரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணையின் போது இந்த தகவல் தெரியவந்தது.

ஊடகவியலாளர் போல் நடித்து ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து படுகொலை செய்ய திட்டமீட்டியமை இதன்மூலம் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .