2021 மே 14, வெள்ளிக்கிழமை

‘முரண் இல்லை’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

கொழும்பு துறைமுக நகரின் திட்டத்தின் சீன அபிவிருத்தி நிறுவனத்துக்குரிய பகுதியை குத்தகைக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்தின் அனுமதி அவசியமென தெரிவித்த நீதியமைச்சர் அலி சப்ரி , பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் அரசியலமைப்புக்கு முரணான ஏற்பாடுகள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (18)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் சட்டமூலம் காணப்படுகிறது என சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவோம்.அரசியலமைப்புக்கு முரணாக ஒருபோதும் அரசாங்கம் செயற்படாது என்றார்.


வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில்  புதிய திட்டங்கள் இச்சட்ட மூலத்தின் ஊடாக வகுக்கப்பட்டுள்ளன.குறுகிய அரசியல்   நோக்கங்களுக்காக  நாட்டின் அபிவிருத்திக்கு  எதிராக செயற்படுவது தவறான செயற்பாடாகும்.

“உலகில் முதலீட்டாளர்களின் பார்வை கோணங்கள் இரண்டு விதங்களில் காணப்படுகின்றன. அதாவது வர்த்தகம் செய்ய தகுந்த நாடு எங்கே உள்ளது என்று பார்க்குமிடத்து நாம் 99ஆவது இடத்தில் இருக்கின்றோம். அதாவது எமக்கு முன்னே 98 நாடுகள் உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில்  டுபாய், குஜராத், தென்கொரியா, மற்றும் மலேசியாஆகிய நாடுகளுக்கிடையில் கடுமையான போட்டித்தன்மை காணப்படுகிறது. போட்டித்தன்மையான சூழ்நிலையில் ஒரு சில விடயங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை இலங்கை முதலீட்டு துறைக்கும் காணப்படுகிறது” என்றார்.
 

அதேபோல, ஒப்பந்தம் குறித்து  சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு செல்லும் போது நாம் 165ஆவது இடத்தில் இருக்கின்றோம் எனத் தெரிவித்த அவர், அதனால், முதலீட்டாளர்களைப் பெற்றுக்கொள்ள புதிய முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

 
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .