2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மரண தண்டனை ஒழிப்பு பிரேரணைக்கு ஆதரவான மனுக்கள் நிராகரிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனையை இல்லாதொழிக்க நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடிய போது, உயர் நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை, சபாநாயகர் அறிவிப்பின்போது, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

முன்னதாக, மரண தண்டனையை இல்லாதொழிக்கவும் அதனோடு தொடர்புடைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான சட்டமூலம், நாடாளுமன்றில் கடந்த 1ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட முன்வைத்த இந்த பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் வழிமொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .