2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மற்றுமொரு உரையாடல் கசிந்தது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு அலைபேசி உரையாடல், ஊடகங்களில் கசிந்துள்ளது.

இந்த அலைபேசி உரையாடலானது, இணையத்தளம் ஒன்றிலேயே தரவேற்றப்பட்டுள்ளது.

இவ்வுரையாடலில், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த ஊடகவியலாளர்களின் பட்டியல் தொடர்பிலான் சம்பாஷணை இடம்பெறுகிறது.

இதன்போது, ஊடகவியலாளர்களின் இந்தப் பட்டியலானது, கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கூடாகவே விநியோகிக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் நகலை வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பி, அது எங்கிருந்து வந்தது என்பதை ஆராயுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, லசந்த விக்கிரமதுங்கவிடம் கோரியுள்ளார்.

அத்துடன் அவர், 'இலங்கை அரசாங்கமானது, இந்தப் பட்டியல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு தயாராகவே உள்ளது என்பதை, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு காட்டத் தயாராக இருக்க வேண்டும்' என்றும் மஹிந்த ராஜபக்ஷவிடம் லசந்த கூறுவதாகவும் அந்த ஒலிநாடா சம்பாஷணை  அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .