Editorial / 2025 டிசெம்பர் 16 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திருமணமான தம்பதியர் உட்பட ஐந்து பேர் இரண்டு வாள்களுடன் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் முல்லைத்தீவு, மூங்கிலாறு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள், போதைப்பொருள் மற்றும் இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் சிறிது காலமாக அந்தப் பகுதியில் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஐஸ், இரண்டு வாள்கள் மற்றும் ரூ.61,000 பணத்துடன் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
25 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
40 minute ago