2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

முல்லைத்தீவு தீயில், உணவகமும் பாதணி கடையும் கருகின

Editorial   / 2025 ஜூன் 16 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (16) ஏற்பட்ட தீயில் உணவகமும் பாதணி கடையும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படைப் பிரிவு இல்லாத காரணத்தினால், இராணுவம், பொலிஸார், அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் இணைந்து தீயினை கடும் பிரயத்தனத்தின் மத்தியில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, நிலைமையை  பார்வையிட்டனர். தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 
தீ பரவல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

விஜயரத்தினம் சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X