Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 31 , மு.ப. 01:00 - 1 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
முல்லைத்தீவு கல்வி வலயத்தின் விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த முன்னணி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பில் தகவல் அறியும் சட்ட மூலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு போலியான பதில்களை வழங்கினார் என்று மேன்முறையீடு செய்யப்பட்ட முல்லைத்தீவு வலய கல்விப் பணிப்பாளரை விசாரணைக்கு வருமாறு தகவல் அறியும் சட்ட ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஒக்டோபர் 5ஆம் திகதியன்று கொழும்பில் உள்ள தகவல் அறியும் சட்ட ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நேரடியாக சமூகமளிக்க ஏதேனும் காரணங்கள் இருப்பின் முன்கூட்டியே தெரிவித்து இணையவழியில் பதில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றும் ஆணைக்குழுவினால் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மணிவிழா தொடர்பான நிதி சேகரிப்பு உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டதா என சில காரணங்களை குறிப்பிட்டு முல்லைத்தீவு வலையக் கல்வி பணிப்பாளருக்கு தகவல் அறியும் சட்ட மூலம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் விசாரணைக்கு சமூக மளிக்குமாறு வலய கல்வி பணிப்பாளருக்கு ஆணைக் குழுவினால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மணிவிழா குழு தலைவர் த.அருட்க்குமரன் தலைமையில் மணிவிழா இடம்பெறுவதாக அழைப்பிதழிலும், பத்திரிகை விளம்பரத்திலும், பத்திரிகை செய்திகளிலும் குறிப்பிடப்பட்ட நிலையில் வலயக்கல்விப் பணிப்பாளர் மணிவிழாக் குழு கூடவில்லை என முறைப்பாட்டாளருக்கு தகவல் அறியும் சட்டமூலத்துக்கு பதில் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் முறைப்பாட்டாளரால் தமக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் போலியான தகவல்களை வழங்கினார் என தகவல் அறியும் சட்ட ஆணைக்குழுவுக்கு மேல்முறையீடு செய்த நிலையில் விசாரணைக்கு சமுகமளிக்குமாறு வலய கல்வி பணிப்பாளருக்கு ஆணைக்குழுவினால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் பாடசாலையில் முரணாக இயங்கும் ஆசிரியர் நலன்புரிச் சங்க யாப்பினை கோரிய நிலையில் வலயக்கல்விப் பணிப்பாளர் முறைப்பாட்டாளருக்கு பதில் எதுவும் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
7 hours ago
7 hours ago
முல்லை சஜுவன் Thursday, 31 August 2023 09:58 AM
இவர் எமக்கு கிடைத்த சாபக்கேடு. தனது குடும்ப சுமைகளை ஆசிரியர்கள் மீது தினித்து திறமையான பல ஆசிரியர்களை அழிப்பவர். வடமராட்சி, வலிகாமம், துணுக்காய் கல்வி வலயங்களில் இவரது விரோத செயற்ப்பாடுகள் பல. ஏற்க்கனவே சந்திரசிறி ஆளுனரால் தன்டனை இடமாற்றம் ஒன்றிற்க்கும் உட்ப்பட்டார். பழிவாங்குவது தொடர்பாக சிறப்பு கற்க்கைநெறி ஒன்றை முடித்திருப்பார் போலும். இரத்மலானை அரசினர் விடுதியில் மதுபோதையில் இவர் நடந்து கொண்டது ...... ! இவரிற்க்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத உயர் அதிகாரிகளே தவறிழைத்தவர்கள்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago