2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

செம்மணி சான்றுப்பொருட்களை மக்கள் அடையாளம் காட்டினார்களா?

Freelancer   / 2025 ஓகஸ்ட் 05 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். எனினும் எவரும் எதனையும் அடையாளம் காட்டவில்லை என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 31 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் செவ்வாயக்கிழமை (5) முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர்.

புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். எவரும் அவற்றை அடையாளம் காட்டவில்லை.

தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டது. இனிவரும் காலங்களிலும் தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் மீட்கப்பட்டால் அவற்றையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X