Freelancer / 2026 பெப்ரவரி 08 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று மலேசியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே இன்று பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
மலேசியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மலேசியா சென்டைந்தார்.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா - மலேசியா இடையே தொடர்ந்து சிறப்பான நட்புறவு உள்ளது. அந்த உறவை இன்னும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் முடிவெடுத்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மோடி வருகையை முன்னிட்டு, மலேசியாவில் வாழும் இந்தியர்கள் கோலாலம்பூரில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் மலேசியாவின் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. பிரதமர் மோடியுடன், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிமும் இதில் பங்கேற்கிறார். (a)

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago