J.A. George / 2020 ஒக்டோபர் 09 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் மிட்லோஜியன் பிரிவில் இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த 17 பேர் கடந்த 7 ஆம் திகதி இரவு முதல், அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்றிரவு (8) அவர்களில் மூன்று பேர் மாத்திரம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய மஸ்கெலியா, மொக்கா தோட்ட மிட்லோஜியன் பிரிவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும், ஒரு யுவதியும் கடந்த 3 ஆம் திகதி ரயில் மூலம் ஹட்டனுக்கு வந்து, அங்கிருந்து பஸ்ஸில் மஸ்கெலியா ஊருக்கு சென்றுள்ளனர்.
மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவலையடுத்து மேற்படி மூவரும் அவர்களின் உறவினர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மினுவாங்கொடயில் இவர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மேற்படி குறித்த மூவரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக அம்புலன்ஸ் வண்டி மூலம் நேற்றிரவு (8) ரந்தம்பே தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களின் உறவினர்கள் வீடுகளுக்குள்ளேயே தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
(எஸ்.கணேசன்)
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026