Editorial / 2021 மே 07 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹரகம நகரசபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய நகரசபை உறுப்பினர் நிஷாந்த விமலசந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.
நகரசபையின் உறுப்பினர்களுக்கான அறையொன்றில் இடம்பெற்ற வாக்குவாதம் அடங்கிய காணொளியை சமூகவலைத்தளம் ஒன்றில் பெண் உறுப்பினரான சாவித்ரி குணசேகர பதிவேற்றியிருந்தாக கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் இது குறித்து பேசப்பட்டபோது ”ஆளும் தரப்பு உறுப்பினரான நிஷாந்த விமலசந்திர, சாவித்ரி குணசேகர அருகில்சென்று தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இதனால் இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.இந் நிலையில் இன்று சாவித்ரி குணசேகர அளித்த புகாரின் அடிப்படையில் நிஷாந்த விமலசந்திர இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .