J.A. George / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை மேயராக கடமையாற்றிய டல்ஜித் அலுவிஹாரேவை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவால் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மாத்தளை மேயர் பதவியில் டல்ஜித் அலுவிஹார, நீடிப்பதற்கு மத்திய மாகாண ஆளுநரால் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
அதன்பின்னர், டல்ஜித் அலுவிஹாரேவின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்த குழுவின் அறிக்கைக்கு அமைய, நேற்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டல்ஜித் அலுவிஹாரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை மாநகர சபையின் துணை மேயர் உள்ளடங்கலாக சபை உறுப்பினர் குழுவினால் மேயர் டல்ஜித் நந்தலால் அலுவிஹாரேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைபாடு தொடர்பாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, அவர் தவறிழைத்தமைக்கான போதியளவு சாட்சிகள் உள்ளமையால் அவரை பதவி நீக்குவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago