Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 மே 26 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டு மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு நடிகையாகவும், உள்நாட்டு கலை மற்றும் சினிமாத் துறைகளுக்கு தனித்துவமான சேவையை ஆற்றிய கலைஞராக மாலினி பொன்சேகாவை விவரிக்கலாம்.
பிரபல நடிகையாக திரைப்படம் மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக தேசிய மட்டத்திலும் சர்வதேச அளவிலும் பல கௌரவங்களுக்கு பாத்திரமாக திகழ்ந்தார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கை சினிமாவின் ராணியாக கருதப்படும் மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) இறுதி அஞ்சலி செலுத்தினார். திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு இறுதிய அஞ்சலி செலுத்தியதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவரும் பிற கலைஞர்களும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டு, நாட்டின் கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக அவரது தலைமையின் கீழ் பணியாற்றினர்கள். அவரது திடீர் மறைவு நாட்டிற்கு ஒர் பேரிழப்பாகும்.
அவர் ஒரு தேசிய சொத்தாக கருதப்பட்டவர். அவரது மறைவால் நான் மிகவும் மனவேதனையடைகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
44 minute ago
57 minute ago
2 hours ago