2025 மே 22, வியாழக்கிழமை

‘மிதிகம ருவன்’னுக்கு விளக்கமறியல்

S.Renuka   / 2025 மார்ச் 05 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலக நபரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான ‘மிதிகம ருவன்’ என்று அழைக்கப்படும் ‘ஜயசேகர விதானகே ருவன் சாமர’ என்பவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுல் லங்காபுர புதன்கிழமை (05) உத்தரவிட்டுள்ளார்.

‘மிதிகம ருவன்’ என்பவர் இன்றைய தினம் ஸ்கைப் காணொளி அழைப்பு ஊடாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘மிதிகம ருவன்’ என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுக் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X