Mayu / 2024 ஜனவரி 04 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழக மீனவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் 12 மீனவர்கள் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, படகின் உரிமையாளருக்கு வெளிவிவகார அமைச்சின் யெலாளர் ஊடாக அழைப்பாணை அனுப்புவது தொடர்பில் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் முன்வைத்த விண்ணபத்தை பருத்தித்துறை நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை நிராகரித்திருந்தார்.
இதையடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அரச சட்டத்தரணி நேரில் முன்னிலையாகி படகு உரிமையாளரை வழக்கில் சேர்ப்பது தொடர்பில் மன்றில் விண்ணப்பம் செய்வதற்கு ஜனவரி 10 ஆம் திகதி வரை அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தனர்.
இந்நிலையில், நேற்றையதினம் (03) குறித்த 12 பேருக்குமான விளக்கமறியலை நீடித்து பருத்தித்துறை நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து குறித்த 12 மீனவர்களும் நேற்றைய தினம் (03) புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளினால் முன்னிலைப்படுத்தப்பட்டு மேற்குறித்த விடயம் தொடர்பில் அவகாசம் கோரி மன்றுரைக்கப்பட்டது.
அதனடிப்படையில் 12 மீனவர்களுக்கான விளக்கமறியலை வரும் 10 ஆம் திகதி வரை நீடித்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
எஸ் தில்லைநாதன்
14 minute ago
23 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
27 minute ago
32 minute ago