Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
R.Maheshwary / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.lk என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது.
இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
புதிய தரப்படுத்தலில் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தினையும், புத்திக பத்திரன மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கடந்த ஜூலை மாதம் நடந்த 6 பாராளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயல்பட்டதற்கும் மற்றும் பங்களிப்பதுக்கமான பாராளுமன்ற உறுப்பினர்களில் தன்னை முதலாவதாக தேர்ந்தெடுத்த Manthri.lk இணையத்தளத்துக்கு நன்றிகள்.
தான் தனது மக்களுக்கான சேவையில் என்றும் பின்னிக்க மாட்டேன் என தெரிவித்துள்ள அவர், பாராளுமன்ற உறுப்பினரின் கடமைகளில் முக்கியமானதும் முன்மையானதும் மக்கள் பிரச்சனைகளை பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லுதுதல் மற்றும் அதற்கான தீர்வுகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அழுத்தங்களை பிரயோகித்தல் ஆகும்.
அந்த வகையில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தனது கடமையை தன்னை தேர்ந்தெடுத்த தனது மாவட்ட மக்களுக்காகவும் தமிழ் பேசும் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் சரியாக செய்கின்றேன் என பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago