2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

முன்னாள் தலைவர் உபாலி லியனகே கைது: பிணையில் விடுவிப்பு

Editorial   / 2025 ஜூன் 27 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மீன்வளத் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் (CFHC) முன்னாள் தலைவர் உபாலி லியனகே, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு  அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, 2014 ஆம் ஆண்டு சேனாரத்ன மீன்வள அமைச்சராக இருந்தபோது மோதரை மீன்வளத் துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியதற்காக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, உபாலி லியனகே மற்றும் மற்றொருவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், அவர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்., சந்தேக நபருக்கு 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளுடன் பிணை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .