2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மூத்த பிரஜைகளுக்கு சந்தோஷமான செய்தி

Editorial   / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு சந்தோஷமான அறிவிப்பொன்றை அரசாங்கம் விடுத்துள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக  ஜனாதிபதி   சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமகாலத்தில் நிலையான வைப்புக்களுக்கான வட்டிவீதம் 8.5  சதவீதமாகக் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது. அதனால், அதிகமான மூத்த பிரஜைகளின் வைப்புக்களிலிருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளின் உயர்ந்தபட்சம் ஒரு மில்லியன் ரூபாய்  வரைக்குமான நிலையான வைப்புக்களுக்கான வருடாந்த வட்டிவீதத்தை 10   சதவீதமாக இரண்டு வருடங்களுக்கு வழங்குவதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X