Editorial / 2019 ஜூன் 02 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணை சபையின் அறிக்கை அடுத்த வாரமளவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்திருப்பதாகவும் அந்தச் சாட்சிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதன் இறுதி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக் சபையின் தலைவராக உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் விஜித் மலல்கொடவும் உறுப்பினர்களாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் எம்.கே. இலங்கக்கோன், முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரும் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டனர்.
இந்தக் சபையின் இடைக்கால அறிக்கைகள் 2 முன்னதாகவே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் அறிக்கை ஜனாதிபதியிடம் அடுத்த வாரம் கையளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago