2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மீனவர்கள் பிரச்சினைக்கு கச்சதீவே காரணம்: மோடிக்கு, ஜெயா கடிதம்

George   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய குற்றச்சாட்டில் இந்த மீனவர்கள்; 34 பேர், இலங்கை கடற்படையினரால்  நேற்று செய்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில்,  குறித்த மீனவர்களின் கைது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கமாறு  கோரிக்கை விடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

''கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக 86 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் உள்ளனர். எனது முயற்சியால், இந்திய அரசாங்கம்  - இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டது. 

இதன்படி, இவர்களை புதன்கிழமை (28) இலங்கை அரசு விடுவிக்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு கடந்த 24ஆம் திகதி தெரிவித்திருந்தது. 

இவர்கள் தங்களது இல்லங்களுக்கு திரும்புவதற்கு முன்பாகவே, இரண்டு வௌ;வேறு சம்பவங்களின் மூலமாக, தமிழகத்தைச் சேர்ந்த 34 மீனவர்கள் புதிதாகக் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (27) 2 படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களும், புதுக்கோட்டையில் இருந்து 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலைமன்னாருக்கும், காங்கேசன்துறைக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்தபோது நடைபெற்ற இந்தக் கைது சம்பவங்கள் நியாயமற்றது. படகுகளை வைத்துக் கொண்டு மீனவர்களை மட்டுமே விடுதலை செய்வது மனித நேயமற்ற செயல். இது தமிழகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிப்பதாகும்.

மிகவும் வேதனையான இந்தப் பிரச்னைக்கு நீண்ட காலத் தீர்வு ஒன்றை உடனடியாகக் காண வேண்டும். இதற்கான வழிவகைகளை தங்களிடம் 2014ஆம் ஆண்டிலும், கடந்த ஒகஸ்டிலும் அளித்த கோரிக்கை மனுக்களில் தெரிவித்திருந்தேன். 

மீனவர்கள் பிரச்னைக்கு மிகவும் முக்கிய காரணியாக விளங்குவது கச்சதீவை இந்தியா-இலங்கை ஒப்பந்தங்கள் மூலமாக, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 86 பேர் புதன்கிழமை விடுவிக்கப்பட உள்ளனர். அவர்களுடன், புதிதாக கைது செய்யப்பட்ட 34 மீனவர்களையும் விடுவிக்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். 

கடந்த இரண்டு நாள்களில் பிடிக்கப்பட்ட 7 படகுகளுடன் இலங்கை வசமுள்ள 46 படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும' என முதல்வர் ஜெயலலிதா, மோடிக்கு அனுப்பிய கடித்ததில் எழுதியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X