2025 மே 19, திங்கட்கிழமை

மேலைத்தேய சங்கீத பரீட்சைக்கு தோற்றிய சகலருக்கும் நியமனம்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலைத்தேய சங்கீத ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வியமைச்சினூடாக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் தோற்றிய சகல மேலைத்தேய சங்கீதப் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

சங்கீதப் பாடங்களுக்கு இவர்களை நியமிக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கட்புலம் மற்றும் ஆற்றுகைக்கலை பல்கலைக்கழத்தில் மேலைத்தேய சங்கீதப் பட்டதாரிகள் உள்ளிட்ட 365 பேர் இந்த பரீட்சைக்கு தோற்றினர். அந்த பரீட்சையில் 124 பேர் மட்டுமே சித்தியெய்தினர்.

அதில், நேர்முகப்பரீட்சையின் ஊடாக 70 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். பரீட்சைக்கு தோற்றி ஆங்கிலத்தில் சித்தியெய்தாதவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு சில, விலக்களிப்புகளை வழங்கும் வகையிலேயே கல்வியமைச்சரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X