Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதேவேளை கிண்ணியா, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு ஆகிய இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளினால் இனச் சுத்திகரிப்பின் பேரில் சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் ஆகின்றன.
கால் நூற்றாண்டு காலமாக சொல்லெனா துயரங்களுடன் அம்மக்கள் இன்றும் புத்தளம், குருநாகல், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அகதி எனும் அவல வாழ்வை அனுபவிக்கின்றனர்.
யுத்த சூழ்நிலைகள் காரணமாக தமது மீள்குடியேற்றம் சாத்தியமில்லை என செய்வதறியாது இருந்த மக்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு தமது சொந்த இடத்திற்கு செல்லும் நாட்கள் அருகில் இருக்கின்றது என்கிற நம்பிக்கை பிறந்தது. பல கரும் நிகழ்வுகளை ஏற்படுத்திய யுத்தம் நிறைவுக்கு வந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்களின் கணவுகள் இன்னும் நனவாகவில்லை.
இந்நிலையில் அம்மகளின் மீள்குடியேற்ற விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமக்குரிய பொறுப்புகளை சரிவர நிறைவேற்றததன் காரணமாக அனைத்து விடயங்களும் ஸ்தம்பித்து காணப்படுகின்றது. இதற்கு எமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என அவ்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .