2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

யூடியூப் சனலுக்கு ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

Simrith   / 2024 மே 15 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு எதிராக யூடியூப் சனல் ஒன்று அவதூறான தகவல்களை வெளியிடுவதையும் தொடர்புகொள்வதையும் தடுக்கும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று புதிய நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிபந்தனை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் 24 (1) மற்றும் பிரிவு 24 (2) ஆகியவற்றின் அடிப்படையில் இராணுவத் தளபதிக்கு ஆதரவாக நிபந்தனையுடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்ததுடன், அந்த உத்தரவை பிரதிவாதிகளான லங்கா V news-YouTube அலைவரிசை மற்றும் அதன் உரிமையாளர் துஷார சாலிய ரணவக்கவுக்குத் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், தனக்கு எதிராக தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான காணொளி உள்ளடக்கங்கள் மற்றும் அறிக்கைகளை பிரதிவாதிகள் பதிவேற்றியதாக மனுதாரர் குற்றம் சாட்டினார். 

சட்டப் பிரிவு 24(6)ன் கீழ் காரணத்தைக் காட்டும்படி பதில் தரப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது. 

மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் ஆஜரானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X