Editorial / 2026 ஜனவரி 19 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த கண்டியைச் சேர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமானது.
அதன் போது புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்ட கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (16) கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர்.
அதன் போதே , 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில் , 203 மாணவர்கள் காணப்பட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து , அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டமை தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் மருத்துவபீடத்தினர் தெரிவிக்கையில், மாணவிகள் மத்தியில் உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை பெற்ற கண்டியை சேர்ந்த யுவதியும் மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து , விரிவுரைகளுக்கு வந்து சென்றுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .