Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரான் பிரியங்கர
கிராமங்களுக்குள் செல்லும் காட்டு யானைகளை துரத்துவதற்காக முதற் தடவையாக ட்ரோன் கமராவைப் பயன்படுத்தும் நடவடிக்கையானது வனஜீவராசிகள் திணைக்களத்தால் புத்தளம்- கல்லடி , கலேவல பிரதேசத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
புத்தளம், ஆனமடுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள காடுகள் மற்றும் திறந்த வெளிகளில் 50 இற்கும் மேற்பட்ட யானைகள் காணபடுவதாகவும் குறித்த யானைகள் கிராமங்களுக்குள் சென்று பயிர்கள், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் இதனைத் தடுப்பதற்காக ட்ரோன் கமராவைப் பயன்படுத்த திட்டமிட்டதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் பிரதேச செயலாளர் இலங்கை விமானப் படையினரிடம் விடுத்த கோரிக்கைக்கமைய அநுராதபுரம் விமானப்படை முகாம் அதிகாரிகளால் இது செயற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கமரா மூலம் யானைகள் இருக்குமிடத்தை அடையாளங் கண்டு அவற்றை காடுகளுக்கு துரத்துவதற்காக குறைந்தளவு கால செலவே ஏற்படுமெனவும் இதன்மூலம் யானைகள் மீது மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்களும் குறைவடையுமென புத்தளம் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
30 minute ago