Editorial / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது, 27 சிறைக்கைதிகள் கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நியோமல் ரங்கஜீவ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவரை பிணையில் செல்ல உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டில் இவரை பிணையில் விடுவிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி பிரித்தி பத்மன் சூரசேன உத்தரவிட்டுள்ளதுடன், இவரது வெளிநாட்டு பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியோமல் ரங்கஜீவ தாக்கல் செய்த பிணைக் கோரி தாக்கல் செய்த மறுபரிசீலனை மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இவரை இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது.
இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான சிறைச்சாலைகள் அதிகாரி எமில் ரஞ்சன் லமாஹேவா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago