A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
கட்சி தொடங்கவில்லை ; அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் என ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ‘அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ஆம் திகதி வெளியிடப்படும்’ என்றும் கடந்த 3 ஆம் திகதி அறிவித்து இருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.
ரஜினிகாந்த் அடிக்கடி இரத்த அழுத்தத்தை கண்காணித்துக்கொண்டு, ஒரு வார காலத்துக்கு வீட்டில் முழு ஓய்வில் இருக்கவேண்டும். உடல் ரீதியான குறைந்தபட்ச செயல்பாடு இருக்கவேண்டும்.
மன அழுத்தத்தை தவிர்க்கவேண்டும்.இந்த நிபந்தனைகளோடு, கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் அவர் தவிர்க்கவேண்டும் என்று ரஜினிகாத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். இது குறித்த 3 பக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago